பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2024

15 நாட்களில் 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

www.pungudutivuswiss.com


இந்த வருடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் பதினைந்து நாட்களில் மாத்திரம் 101362 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.

இதன்படி, ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை முதல் பதினைந்து நாட்களில் அதிகரித்துள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரஷ்யாவில் இருந்து வருகைத்தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 16,263 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், இந்தியாவிலிருந்து 15,324 சுற்றுலாப்பயணிகளும் பிரித்தானியாவில் இருந்து 7,000 சுற்றுலாப்பயணிகளும் சீனாவில் இருந்து 4,000 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.