பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2024

ஆனையிறவில் அதிகாலையில் கோர விபத்து! - ஒருவர் பலி, 8பேர் காயம்.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பேருந்தும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து வீதியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த மாடுகளுடன் மோதிய நிலையில், எதிரே வந்த வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிசிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.