பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2024

பிக் மீ சாரதி, பயணி மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com


கோண்டாவிலில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் PickMe சாரதி ஒருவர் மற்றொரு ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியஇடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.

கோண்டாவிலில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் PickMe சாரதி ஒருவர் மற்றொரு ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று மதியஇடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்

அவரை அழைத்த பயணியும் குறிப்பிட்ட சாரதியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இருந்த பயணிகள் இருவர் PickMe மூலம் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தினார். இதன்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதி வாடிக்கையாளர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை,அவ்விடத்திற்கு வந்த மற்றொரு முச்சக்கர வண்டி சாரதி அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பயணியையும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.