பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2024

இராணுவ வாகனம் மோதி பிரதேச செயலக பணியாளர் மரணம்]

www.pungudutivuswiss.com

 வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடையவரே  உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்

பணி முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது மருதங்கேணி நோக்கி சென்ற இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .