பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2024

தரமற்ற ஊசிமருந்து இறக்குமதி - 10 மணி நேர விசாரணைக்குப் பின் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

www.pungudutivuswiss.com

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து சிஐடியில் முன்னிலையான அவரிடம், 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்டார்.