பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2024

இணுவிலில் ரயில் மோதி 6 மாத குழந்தையும், தந்தையும் பலி! - தாய் உள்ளிட்ட மூவர் படுகாயம்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று மாலை ஹையேஸ் வான் மீது ரயில்  மோதிய  விபத்தில், ஆறு மாதக் குழந்தையும், தந்தையும்  உயிரிழந்துள்ளனர். வானில் பயணித்த தாய் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயாரான 22 வயதுடைய பெண், படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் ரயில் கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.