பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2024

சிங்கப்பூர் மருந்து கேட்கிறார் ரம்புக்வெல்ல

www.pungudutivuswiss.com

தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் இருப்பதாக வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மருந்து தேவைப்படுவதாகவும், தன்னை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைக் கைதிகள் உயிரிழக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ்வாறானதொரு அனுமதி வழங்கப்படுமாயின் அந்தத் தீர்மானத்தை வழங்கும் வைத்தியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.