பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2024

வலி வடக்கில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

www.pungudutivuswiss.com

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று பயிர் செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று பயிர் செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது

இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்குவதற்கான உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் - ஒட்டகப்புலத்தில் நடைபெற்றது.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு, ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது.

அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் குறித்து நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள் இராணுவத்தினர் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

   
   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome