பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2024

ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

www.pungudutivuswiss.com

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும்  இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின் பின்னர் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.