பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2024

இலங்கையின் காரீயச் சுரங்கங்களை குறிவைக்கும் இந்தியா

www.pungudutivuswiss.com



இலங்கையில் உள்ள  காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த முயற்சித்து வருகிறது.  காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் உள்ள காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கையில் உள்ள காரீய சுரங்கங்களை கையகப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த சுரங்கங்களை யைகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதேவேளை, இலங்கையில் காணப்படும் காரீயம் மிகவும் தரம் வாய்ந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது