பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2024

அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராகிறார் மஹிந்த

www.pungudutivuswiss.com
பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.