பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2024

செப்ரெம்பர் 21இல் ஜனாதிபதி தேர்தல்?

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும்,  உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது

முன்னர் ஒக்டோபர் 5ம் திகதிமுதல் 12ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என தெரியவருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 16 முதல் 21நாட்களிற்குள் வேட்புமனுக்கள் பெறப்படவேண்டும்,28 முதல் 42 நாட்களிற்குள்தேர்தல் நடைபெறவேண்டும் என இதன் மூலம் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையகத்திற்கு 63 நாட்களை வழங்க முடியும் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தலைநடத்துமாறு வேண்டுகோள் விடுக்ககூடாது இது தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் செயலாக பார்க்கப்படலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.