பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2024

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

www.pungudutivuswiss.com

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு 
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமாகியது.

இதன்போது பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன், யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் உட்பட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.