பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2024

வேலுக்குமாருக்கும் திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம்,மூன்று பார் பெமிட்?

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வெளியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கும் மதுபானச்சாலை அனுமதிப்பத்திரம் தொடர்பில் திருட்டு மௌனத்தை கடைப்பிடித்துவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரணிலுடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியோடு இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை 5 கோடி வீதம் 15 கோடி க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா