பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2024

யாழ்ப்பாணத்தில் 6 ஆக குறையும் எம்.பிக்கள்! - வன்னியில் 6 ஆக அதிகரிப்பு. [Wednesday 2024-09-25 18:00]

www.pungudutivuswiss.com

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையாக 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதேவேளைகுறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக குறையவுள்ளது. வன்னி மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்கள் 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது