பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2024

ரணில் வேண்டாம்:மகிந்த

www.pungudutivuswiss.com



ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், அது தொடர்பான அரசியல் செயற்பாடுகளை கீழ் மட்டத்திலிருந்து திட்டமிட வேண்டும் என அவர்  தெரிவித்தார் .

மேலும், வலுவான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் அதிகார சபையை அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .

மேலும், நாடாளுமன்றத்தில். கைப்பற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்