பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2024

நாமலின் கூட்டத்தில் கல்வீச்சு

www.pungudutivuswiss.com

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டையில், நாமலுக்கு இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.