பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2024

மேலும் 20 சீனர்களுக்கு விளக்கமறியல்! [Thursday 2024-10-10 05:00]

www.pungudutivuswiss.com


பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

மேல்மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் இணையவழி பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளுக்கும், இன்று கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.