பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2024

225 உறுப்பினர்கள் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றம் கூடும்? [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்

.

நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின் அதன் முடிவுகளை 18ஆம் திகதியாகும் போது வழங்கி நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க முடியும் என தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் அவற்றிலிருந்து தெரிவு செய்து , தேசியப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பெயர் பட்டியலை கட்சி செயலாளர்களால் வழங்க முடியுமா என்பது சிக்கலாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை நடத்தி மிக குறுகிய காலப்பகுதியில் தேசியப் பட்டியலின் பெயர்ப் பட்டியலை வழங்க முடியும் எனில் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என அவர் கூறினார்.

அவ்வாறு இல்லையெனில், நாடாளுமன்றத்தை கூட்ட அவசியமான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்