பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2024

சுவிஸ் தூதரக அதிகாரிகள் செல்வம் அடைக்கலநாதனுடன் சந்திப்பு! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர்  இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில்  சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது கட்சியின் செயல்பாடுகள் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தற்போதைய தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த ஜஸ்டின் தலைமையிலான குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.