பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2025

யாழில் இடம்பெறும் முறைகேடு! அரச ஊழியர்கள் மீது அமைச்சர் காட்டம்

www.pungudutivuswiss.com
யாழில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின்
விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற
வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ்.(Jaffna) தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் விசாரணைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.