பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2025

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைக் குழு கூடுகிறது! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com


ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது

அத்துடன் அடுத்தகட்டமாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் விரிவாகக் கலைந்துரையாடவுள்ளதோடு உள்ளுராட்சி தேர்தலை முகங்கொடுப்பதற்கான வியூகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.

கூட்டணிக்குள் இளந்தலைமுறையினரை உள்வாங்குதல் மற்றும் சிரேஷ்ட தலைவர்களின் எதிர்கால அரசியல் பயணம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் உரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.