சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க உத்தரவு! [Wednesday 2025-02-05 16:00]
www.pungudutivuswiss.com
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை அவமதித்த சம்பவம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.