பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்குத் தொடர்பு? [Tuesday 2025-02-25 05:00]

www.pungudutivuswiss.com

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா  என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்

பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல் வாரம் கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போது அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவிருந்ததாக தனக்கு தகவலொன்று கிடைத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக அன்றைய தினம் மெய்நிகர் ஊடாக அவரை வழக்கு விசாரணைகளில் முன்னிலைப்படுத்தியதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றத்தில் சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவிருந்தமைக்கான காரணம் அந்த நீதிமன்றத்தின் மீதுள்ள கோபத்தால் அல்ல, சஞ்சீவ மீதிருந்த கோபத்தினாலாகும்.

கம்பஹா நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை பொலிஸார் தடுத்துள்ளனர் என்பதால், அதனை கொழும்பு நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம் என்பதை ஊகிப்பதற்கு பெரும் புலமை தேவையில்லை. ஆனால் தகவல் கிடைத்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பதில் பொலிஸ்மா அதிபர், கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்படுவதற்கு இடமளித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

கொழும்பிலும் சஞ்சீவ மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என பதில் பொலிஸ்மா அதிபர் சிந்திக்காமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. சஞ்சீவ மீது இலக்கு வைத்தவர்கள் கைது செய்யப்படும் வரை அவருக்கான அச்சுறுத்தல் நீங்கவில்லை என்பதையும் பதில் பொலிஸ்மா அறிந்திருப்பார். அந்த வகையில் இந்தக் கொலையில் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது.

அவ்வாறெனில் பதில் பொலிஸ்மா அதிபர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 12 நாட்களுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிய ரவி செனவிரத்னவுக்கே இந்த பொறுப்பு காணப்படுகிறது. இவர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருக்கும் வரை புலனாய்வு தகவல்கள் கிடைத்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமலிருக்கும் நோய் ஒருபோதும் குணமடையப் போவதில்லை என்றார்.