நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் அது போன்ற எந்த விதியும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் ஆனால், பாடசாலை அமைப்புகளை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார். கல்வி அமைச்சராக பிரதமர் விதித்ததாகக் கூறப்படும் தடை இருந்த போதிலும், அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை நிகழ்வுகளில் எவ்வாறு கலந்து கொள்கிறார்கள் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கேள்வி எழுப்பிய போதே, ஹரிணி, தமது நிலைப்பாட்டை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த பிரதமர், அத்தகைய தடை எதுவும் இல்லை எனவும் முன்னர் தாம் வெளியிட்ட கருத்தை, ஊடகங்கள் தவறாக அறிக்கையிட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். |