மன்னார் நகர சபைக்குத் தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நாம் அங்கீகாரம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்வோம். வேறு தரப்பிடம் நிர்வாகம் போனால் அவர்களின் திட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பத்து தடவை பரிசீலித்தே முடிவெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு உரையாற்றி இருக்கின்றார். இந்த உரை அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட இருக்கின்றோம். மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம் எனவும் தெரிவித்தார். |