பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2025

நீதி கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்- கலைந்து போகச் செய்த பேராயர்! [Tuesday 2025-04-22 05:00]

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி  நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் நேற்று மாலை 3.30  மணியளவில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் நேற்று மாலை 3.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர்

இவர்கள் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு 21ஆம் திகதியன்றும் இந்த சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று, ஆர்ப்பாட்டக்காரர்களோடு கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.