பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2018

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு - கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதன் மூலம் ரணில் அரசுடன் கொண்டிருந்த கள்ள உறவு பொது வெளிக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட 14 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இலங்கை ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என்ற தாங்கள் கருதும் உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கூட்டமைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளது. மஹிந்த தனது ஆதரவு பலத்தை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றமை மற்றும் இரண்டு தடவைகள் அவருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி என்பவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கையினை முன்வைப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.