பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2012


நீதிபதி சரோஜினி இளங்கோவனை தாக்கிய பெண்ணை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான சறோஜினி இளங்கோவன் மீது  தாக்குதல் நடத்திய பெண்ணை 29ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சறோஜினி இளங்கோவனைத் தாக்கிய பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், தாக்கிய பெண் மனநலம் குன்றியவர் என்றும் அவரது தந்தை அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்ததையும் அடுத்து அப் பெண்ணை 29ம் திகதி நீதிமன்றில் ஆஜராக்குமாறு சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
கணவரால் மனநிலை பாதிக்கப்பட்ட அப் பெண் சட்டத்தரணியைத் தாக்கியும் ஏசியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப் பெண்ணை பெண் பொலிஸ் பாதுகாப்புட்ன் நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.