பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2012


இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்த இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கைது
இந்தியாவில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று குன்னூரில் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமுக்குள் நுழைய முயன்ற போது, நாம் தமிழர் கட்சியினருக்கும், பொலிஸாருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
15 நிமிடம் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தள்ளியதில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு, முகாமுக்குள் நுழையு முயன்ற 30 பேரும் கைது செய்யப்பட்டனர்.