பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2012


வவுனியாவில் 8 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி
நேற்று மாலை கிணற்றில் விழுந்த குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள், வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் விதுஷாலனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்