பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2012


டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை தமிழ் ஈழ ஆதரவு பிரதிநிதிகளுக்கு விசா மறுப்பு
 சென்னையில் இன்று டெசோ மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


இலங்கையை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள் சிலருக்கும், டெசோ மாநாட்டில் பங்கேற்க விசா மறுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுபற்றி, தி.மு.க. எம்.பி.யும், அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன்,

’’சென்னையில் நடக்கும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை, அமெரிக்கா, கனடா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.  ஆனால், அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தை பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, வெளியுறவு துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.


இனிமேல் அவர்களுக்கு விசா வழங்கினாலும் பிரயோஜனம் இருக்காது. அனுமதி கிடைத்து அவர்கள் சென்னை வந்து சேர மிகவும் தாமதமாகி விடும்’’ என்று கூறினார்.

இலங்கையை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளரும் சிங்களத் தவருமான விக்ரமபாஹு கருணாரத்னே, டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது.

இந்த விஷயத்தை அவர் கலைஞரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். ஆனாலும், பிரயோஜனம் இல்லை. அதேபோல, சிங்கள இடதுசாரி தலைவரான சிரிதுங்கா ஜெயசூரியாவுக்கும் விசா கிடைக்கவில்லை.

இவர் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்.