பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2012


வைகோ,நெடுமாறன்,சீமானின் கூட்டுச்சதி : திமுக குற்றச்சாட்டு
சென்னையில் இன்று நடைபெறும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.   அழைப்பின்பேரில் இலங்கை நாட்டு பிரதிநிதிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும்
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக விரும்பினார்கள்.



ஆனால் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டது.    இதுபற்றி, தி.மு.க. எம்.பி.யும், அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன்,

’’சென்னையில் நடக்கும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை, அமெரிக்கா, கனடா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.  ஆனால், அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தை பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, வெளியுறவு துறை அமைச்சகத்தின் கவன த்துக்கு கொண்டு சென்றார்.

இனிமேல் அவர்களுக்கு விசா வழங்கினாலும் பிரயோஜனம் இருக்காது. அனுமதி கிடைத்து அவர்கள் சென்னை வந்து சேர மிகவும் தாமதமாகி விடும்’’ என்று கூறினார்.
அவர் மேலும்,  ‘’இலங்கைப்பிரதிநிதிகளும்,  இலங்கையில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்பதாக இருந்தனர்.  வைகோ, பழ.நெடுமாறன், சீமான் ஆகியோர் கூட்டுச்சதி செய்து, மாநாட்டுக்கு வரக்கூடாது என்று தொடர்ந்து அவர்களுக்கு சொல்லிவந்தனர்.   இறுதியாக ராஜபக்சேவும் அதற்கு தகுந்தார்போல் நடந்துகொண்டதால் அவர்களால் வர முடியவில்லை.
ஆனாலும், வைகோ,நெடுமாறன், சீமான் ஆகியோரின் கூட்டுச்சதி முறிக்கப்பட்டு, மாநாடு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது’’ என்று கூறினார்.