பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2012

கதிர்காமத்தில் பெரஹரா நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். இச்சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்

சந்தேக நபரான பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தி வருவதாக பொலிஸ் ஊடாக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

குறித்த சிறுமி பெற்றோருடன் கதிர்காமத்திற்கு சென்று பெரஹரா நிகழ்வினை பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே பின்னால் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அச்சிறுமியை பாலமொன்றிற்கருகில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். அதன்போது சிறுமி கூச்சலிடவே பொது மக்கள் அந்த பொலிஸ் கான்ஸ்டபிளை பிடித்து கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை தீவிர விசாரணைக்குட்படுத்தி வரும் கதிர்காமம் பொலிஸார் அவரை திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.