பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2012


தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதியினர் லண்டனிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சக் கோரிக்கை  நிராகரிக்கபட்டவர்கள் ஒரு தொகுதி இலங்கையர்கள் எதிர்வரும் செப்டம்பர் 19 ம் திகதி  pvt030 என்ற விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர் .
இந்த விமானம் பிரித்தானியாவில் இருந்து 19ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படுகின்றது.
இவ்விதம் அகதி தஞ்சம் நிராகரிக்கபட்டவர்கள் கையொப்பமிடச் செல்லும் வேளை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களுக்கான விமானச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விதம் எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை இந்த சீட்டுக்கள் குடிவரவு குடியகல்வு அமைச்சினால் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரேயொரு நபருக்கான டிக்கட் சட்டத்தரணி வாசுகிக்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
தனி விமானம் என்கின்றபோது அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.
இவ்விதம் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் உங்கள் சட்டத்தரணிகளை தொடர்பு கொண்டு அதற்கான ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்ளும்படி சமூக நலன்விரும்பிகள் வேண்டியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.