பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2012

சப்ரகமுவவில் 2  தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து சேவல் சின்னத்தில் களமிறங்கின.
சப்ரகமுவவில் இரத்தினபுரி மாவட்டத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும் கேகாலை மாவட்டத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் கணிப்பிடக் கூடியதாக உள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.
சப்ரகமுவவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பெறப்பட வேண்டும் என்ற தமது போராட்டம் வெற்றியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.