பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2012



கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்ததாலும், பெருந்தொகையான மக்கள் வாக்களிக்காமல் இருந்தாலும் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும், திருகோணமலையில் 3 ஆசனங்களும் அம்பாறையில் 2 ஆசனங்களுமான 11 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களையும்,
திருமலையில் இரு ஆசனங்களையும் அம்பாறையில் ஒரு ஆசனங்களையுமாக 5 ஆசனங்களை தமிழரசுக்கட்சி இழந்துள்ளது.
தமிழ் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்தாலும் பெருந்தொகையான தமிழர்கள் வாக்களிக்காமல் அசமந்த போக்கில் இருந்ததாலும் சிங்கள பேரினவாதம் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களின் இருப்பு கிழக்கில் கேள்வி குறியாகியுள்ளது. இந்த ஆபத்தை உணராது சிங்கள பேரினவாத கட்சிக்கு வாக்களித்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் இருப்பையும் இழக்க செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மட்டக்களப்பில் 4 ஆசனங்களையும் திருகோணமலையில் 3 ஆசனங்களையும் அம்பாறையில் 5 ஆசனங்களையும் பெற்று 12 ஆசனங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் கூடிய ஆசனங்கள் பெற்ற கட்சி என்ற வகையில் 2 மேலதிக ஆசனங்களும் வழங்கப்படும். இதன் மூலம் அக்கட்சி 14 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் அம்பாறையில் 4 ஆசனங்களையும் மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தையும் திருகோணமலையில் இரண்டு ஆசனங்களையுமாக அக்கட்சி 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும் அம்பாறையில் 3 ஆசனங்களையுமாக 4 ஆசனங்களை பெற்றுள்ளது.
என்.எவ்.எவ் கட்சி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.