பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2012





செந்தூரன்
உண்ணாநிலைப் போராளி.
அவரது கொள்கையிலும் நிலைப்பாட்டிலும்
சரியாகவிருக்கிறார். பாராட்டுகிறேன்.

ஈழத்தமிழர்களை முகாம்களிலும், சிறப்புமுகாம்களிலும், அடைத்துவைப்பது , அதுவும் போர் முடிந்த காலமாக கருதும், இந்நாட்களிலும் கைதியாக வைத்திருப்பது முறையா? அப்படியாயின், அவர்களைவிசாரணைக்குட்படுத்தவேண்டும், அல்லது விடுவிக்கவேண்டும், அல்லது நாடுகடத்தப்படவேண்டும். இதைவிடுத்து, சிறப்புமுகாம்கள், முகாம்கள்
, என்ற போர்வையில், எதை இந்த ஈழத் தமிழர்கள்மீது பிரயோகிக்க எண்ணுகிறார்கள்?
யாரைக் குஷிப்படுத்த, யாரின் நலன்காக்க இந்தச் செயல்ப்பாடு? ஆக இது ஒரு அரசியல் நாடகம் என எண்ணத் தோன்றுகிறது. ஆகவே இதை அரசுவழிப் போராட்டமாக, அரசியல்வாதிகளும், மக்களும், மாற்றியமைக்கவேண்டும். அவரின் உயிர்காக்க ஆவன செய்யவேண்டும். மரணத்தின் பின்னர், மலர்மாலை போட்டு, அரசியலாக்கி, சுகம்காணும், அரசியல்ப்போக்கு மறையவேண்டும். ஆரோக்கியமான மாற்றமொன்றே அவசியமானதாகப்படுகிறது.