பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2012


இலங்கையர்கள் தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டாம்: இலங்கை அரசாங்கம் பயண எச்சரிக்கை
இலங்கையர்கள் மறு அறிவித்தல் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் பூர்ணிமா தேவாலயத்துக்கு சென்ற 184 இலங்கை அடியார்கள் தாக்கப்பட்டமையை அடுத்தே இந்த பயண எச்சரிக்கையை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இந்த எச்சரிக்கையை இன்று இரவு வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு செல்லும் இலங்கையர்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கு சென்றுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதேவேளை, தமிழ்நாட்டை தவிர்ந்த ஏனைய இந்திய மாநிலங்களில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.