பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2012


புலிகளின் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டுள்ள படையினர்!


தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகப்பிரமாண்டமான அளவில் கட்டமைக்கப்பட்டு வந்த நீர் மூழ்கி கப்பலின் கட்டுமானங்களையும் கப்பலை சோதனையிடுவதற்கான புலிகள் அமைத்திருந்த நீர்த்தடாகத்தையும் படையினர் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விட்டுள்ளனர்.
இரட்டை வாய்க்கால் சந்தியிலிருந்து மாத்தளன் வைத்தியசாலை நோக்கிச் செல்லும் வீதியில் கடற்கரைய அண்டிய இரகசிய இடத்தில் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இந்த கப்பலை சோதிப்பதற்கான தடாகமும் பிரமாண்டமானளவில் அமைந்துள்ளது.
இதனோடு அந்த இடத்தில் குறித்த கப்பலுக்குள் பொருத்துவதற்கான புலிகள் எடுத்து வந்தி ருந்த மிகப்பெரிய இந்திரங்கள் சிலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர் மூழ்கிக் கப்பலை தாங்கிச் செல்வதற்கான வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவையனைத்தும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கிற்குப் படையெடுக்கும் பெருமளவு சிங்கள மக்கள் இதனை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். தமிழ் மக்களும் சென்று பெருமையுடன் பார்த்து வருகின்றனர்.