பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2012

நியூயார்க் செல்கிறார் ஸ்டாலின். டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐநா சபையில் கொடுக்கிறார்திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் அக்டோபர் 3ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.

இந்தக்கூட்டத்தை தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக பாராளுமன்ற குழுதலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் 6ம் தேதி நியூயார்க் சென்று டெசோ மாநாட்டுத்தீர்மானங்களை ஐநா சபையில் கொடுக்க உள்ளனர்.
அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்,பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், ஹசன் முகமது ஜின்னா
உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இலங்கை போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் வரும் அக்டோபர் , நவம்பரில் ஆய்வு நடத்த உள்ளது. 
இந்த ஆய்வை நடத்தும் பொறுப்பு இந்தியா,ஸ்பெயின் ஆகிய நாடுகளிடம்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை இந்தியா மனிதாபிமானத்தோடு  நடத்த வேண் டும் என்று கலைஞர் ஏற்கனவேகோரியிருந்தார்.
இது தொடர்பாக அக்டோபர்3ம் தேதி கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்படவுள்ளது.  டெசோ மாநாட்டு தீர்மானங்களை இந்திய அரசின் சார்பில் ஐநா சபையில் கொடுப்பதற்கு திமுக சார்பில்
முயற்சிக்கப்பட்டது. 

ஆனால், இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் திமுக சார்பிலும்
கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.   பின்னர், திமுகவின் வற்புறுத்தலால் டெசோ தீர்மானங்களை திமுக சார்பில் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.