பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2012

வைகோ உட்பட மதிமுக.வினர் 1200 பேர் கைதாகி விடுதலை
மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைய முயன்ற மதிமுக கட்சியின் தலைவர் வைகோ உட்பட 1200 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து மத்திய பிர
தேசத்தில் உள்ள சாஞ்சி நகரில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த வைகோ தலைமையில் மதிமுக.வினர் சென்னையில் இருந்து சென்றனர். ஆனால் அவர்கள் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து மதிமுகவினர் சாலையில் அமர்ந்து 3நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறையினர் கைது நடவடிக்கை குறித்து பேசிய வைகோ, தானும் தொண்டர்களும் சாஞ்சி நகரை நோக்கி செல்ல தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுத்த மத்திய அரசையும் பாரதிய ஜனதா தலைமையிலான மாநில அரசையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் வைகோ தெரிவித்தார்.