பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2012


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
பத்திரிகை பிரமுகர்களுடன் இன்று அலரி மாளிகையில் வைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கை ஒன்றை கட்டி எழுப்புவதே தமது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நாட்டின் அபிவிருத்தி குறித்து சிந்திப்பதாகவும், அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.