பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2012


பிள்ளையான் ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதாக இலங்கையின் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரியிடம் முறையிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரின் உத்தரவுக்கு ஏற்ப மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விருப்பு வாக்குகளை 22ஆயிரமாக அதிகரித்ததாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.
விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்ட விடயத்தை ஊடகவியலாளர்களிடம் கூற வேண்டாம் என தனக்கு நெருக்கமான அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதாக இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல் ஒன்று கூறுகின்றது.