பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2012

ராஜபக்சேக்கு கறுப்புக் கொடி காட்ட உள்ளார் வைகோ
மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‌நேரடியாக சென்று கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புத்தர் ஞானம் பெற்றதன் 2600வது ஆண்டு விழாவை முன்னிட்டு புத்த மதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 21ம் திகதி நடைபெற உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வருகிறார்.
மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‌நேரடியாக சென்று கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி மகிந்தவின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.