பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2012


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை புலம்பெயர் தமிழர்களினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: பீரிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையை சில புலம்பெயர் தமிழர்களினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அந்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட முடியும் எனவும், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும் நாட்டில் 8.2 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கில் 22 வீத பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுநிலையான தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.