பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2012


கிழக்கு மாகாணத் தேர்தல் நாளை! வன்முறை மூளும் அபாயம்! எச்சரிக்கிறது கபே அமைப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் வெடிக்கக்கூடுமென கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கபே கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வன்முறைகள் இடம்பெற்றால் அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகம் பாதிப்படைய நேரிடும் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்று மற்றுமொரு கொலன்னாவ பிரதேசமாக மாற்றமடையக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் எச்சரிக்கைகளை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் உதாசீனம் செய்த காரணத்தினாலேயே கொலன்னாவ பிரதேசத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றிலும் இதே நிலைமை நீடித்து வருவதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசிமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.