பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2012


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் , பொதுச் செயலாளரின் வாகனங்கள் மீது தாக்குதல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஆர்பாட்டத்தை முடித்துவிட்டு மதியம், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் பயணித்த வாகனத்தின் மீது முள்ளியவளயில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் கல்வீசித்தாக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தேராவிலுள்ள இரண்டு இராணுவ முகாம்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனம் தாக்குதலுக்குள்ளானதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன்  பின்னால் பயணித்த பேரூந்து மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தின் முன் கண்ணாடியின் மீது கல் வீச்சுக்கு இலக்காகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அளவிலான இராணுவக் காவற்றுறையினரின் முகாம் ஒன்று உள்ளதாகக் கூறப்படுகிறது.