பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2012


கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை தருக!-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இரண்டு கட்சிகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமது தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளன.
இந்தக்கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் கிழக்கு மாகாணசபையில் 15 ஆசனங்கள் உள்ளன. இந்தநிலையில் தமது ஆட்சி நிறுவலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இந்த இரண்டு கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.