பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2012


இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டால் பீரிஸ் பதவி விலகவேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு, இலங்கை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாக இருந்தால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் பதவி விலக வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதான செயலாளர் வசந்த பண்டார கருத்து தெரிவிக்கும் போது, இந்த குழு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை ஐக்கிய நாடுகளில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் முறையாக செயற்படாமையே காரணம் என்றும் எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று வசந்த பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு வெளியுறவுகள் துறை அமைச்சை தொடர்பு கொண்டுகேட்ட போது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, இலங்கை தொடர்பில் உள்ளக அறிக்கை ஒன்றையே தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.